தொழில்நுட்பம்
Trending

பதிவுகளுக்கான (POST) லைக் கவுண்ட்டுகளை நீக்கப்போகும் ஃபேஸ்புக்!

Story Highlights

  • Trending

உலகின் பல கோடி பயனாளர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் பிரபல சமூக வலைதளமான Facebook, முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது.

இதுவரை பயனாளர்கள் இடும் பதிவுகளுக்கு எத்தனை பேர் லைக் கொடுத்திருக்கிறார்கள் என்ற எண்ணிக்கையை காட்டி வந்த ஃபேஸ்புக் நிறுவனம் அதை மறைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. இதன் முன்னோட்டத்தை, ஃபேஸ்புக் நிறுவனத்தின் மற்றொரு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அதன் சோதனை ஓட்டத்தை தொடங்கியிருக்கிறது.

ஃபேஸ்புக் நிறுவனம் இந்த திடீர் நடவடிக்கையில் இறங்கியிருப்பதற்கு காரணம், பயனாளர்கள் மற்ற நண்பர்களின் பதிவுகளுக்கு கிடைக்கும் லைக்கையும், தங்கள் பதிவுகளுக்கு கிடைக்கும் பதிவுகளையும் ஒப்பிட்டுக் கொள்கிறார்கள். இதை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை என்று தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையை மறைப்பதன் மூலம் பயனாளர்கள் தங்கள் பதிவுகளை டெலிட் செய்யவோ அல்லது பதிவுகள் இடுவதை தவிர்க்கவோ மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளது.

ரிவர்ஸ் இஞ்சினியரிங் நிபுனரான ஜேன் மன்சுன் வாங், ஆண்ட்ராய்ட் ஃபேஸ்புக் ஆப்பில், லைக் எண்ணிக்கையை மறைக்கும் வேலைகளில் இறங்கியிருப்பதை கண்டுபிடித்தார். இது குறித்து பிரபல டெக் நிறுவனமான டெக் க்ரன்ச் பேஸ்புக் நிறுவனத்திடன் விசாரித்த போது, லைக் எண்ணிக்கையை மறைப்பதற்கான சோதனைகளை செய்துவருவதை ஒப்புக்கொண்டது. ஆனால் இந்த நடைமுறை இன்னும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படவில்லை என்பதை தெரிவித்துள்ளது

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker