தொழில்நுட்பம்

இந்தியாவில் வாட்ஸ் அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 34 கோடியை தாண்டியது!

Story Highlights

  • Knowledge is power
  • The Future Of Possible
  • Hibs and Ross County fans on final
  • Tip of the day: That man again
  • Hibs and Ross County fans on final
  • Spieth in danger of missing cut

வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை 340 மில்லியனாக அதிகரித்துள்ளது.

மெசேஜிங் செயலிகளுள் உலகின் முன்னோடியாக திகழும் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. உலக அளவில் வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இந்தியாவில் தான் அதிகம் என்பது நாம் அறிந்ததே. இருப்பினும் இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

eMarketer என்ற சந்தை ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று அண்மையில் நடத்திய ஆய்வில் உலகிலேயே வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 340 பில்லியனாக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரில் 90% அதிகமானவர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்துவார்கள் என அந்நிறுவனம் கணித்துள்ளது. வாட்ஸ் அப்பை பொறுத்தவரையில் இந்தியா தான் அதன் முக்கிய சந்தையாகும். இந்தியாவிற்கு அடுத்ததாக பிரேசில், அமெரிக்கா மற்றும் இந்தோனேசியா நாடுகள் உள்ளன.

வாட்ஸ் அப் பயனாளர்கள் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியல்..

1. இந்தியா – 340 மில்லியன் (34 கோடி)
2. பிரேசில் – 99 மில்லியன் (9.9 கோடி)
3. அமெரிக்கா – 68.1 மில்லியன் (6.8 கோடி)
4. இந்தோனேசியா – 59.9 மில்லியன் (5.9 கோடி)
5. மெக்சிகோ – 57.2 மில்லியன் (5.7 கோடி)
6. ரஷ்யா – 54.1 மில்லியன் (5.4 கோடி)
7. ஜெர்மனி – 43.9 மில்லியன் (4.3 கோடி)
8. இத்தாலி – 32.9 மில்லியன் (3.2 கோடி)
9. ஸ்பெயின் – 30.5 மில்லியன் (3 கோடி)
10. இங்கிலாந்து – 27.6 மில்லியன் (2.7 கோடி)

இதனிடையே 2020ம் ஆண்டு முதல் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களில் விளம்பரங்கள் இடம்பெறும் என சந்தை ஆராய்ச்சியாளர் Matt Navarra என்பவர் தகவல் வெளியிட்டுள்ளார்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker