அரசியல்இந்தியா

யார் இந்த அபிஜித் பானர்ஜி…

17 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட ‘ஏழை பொருளாதாரம்’ போன்ற மிக முக்கிய பொருளாதார புத்தகங்களை எழுதியவர்.

வறுமை ஒழிப்பு குறித்த இவரது பார்வை உலக அளவில் பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது.

என்னதான் இப்போது அமெரிக்காவில் பணியாற்றினாலும் இவருக்கு பூர்வீகம் என்னவோ மேற்கு வங்கம்தான். அவர் தான் அபிஜித் பானர்ஜி. பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெறுபவர்.

Image result for abhijit banerjee

1961-ஆம் ஆண்டு தீபக் – நிர்மலா இணைய தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர். இவரது தந்தை கொல்கத்தா மாநில கல்லூரியில் பொருளாதார துறையின் தலைவராக பணிபுரிந்தார். இவரது தாய் கொல்கத்தா சமூக அறிவியல் ஆய்வு மையத்தில் பேராசிரியாகப் பணிபுரிந்தார்

அவரது தந்தை தீபக்கைப் போல இவருக்கும் பொருளாதாரத்தில் அலாதிப் பிரியம். 1979-ஆம் ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்த அவர் கல்லூரியில் தேர்ந்தெடுத்த துறை பொருளாதாரம்.

இவரது பெற்றோரும் இவருக்குத் துணையாக இருக்க 1981-ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் தனது இளங்கலையை முடித்தார். அதைத் தொடர்ந்து புகழ்பெற்ற டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 1983-ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார்.

Image result for abhijit banerjee

அதனைத் தொடர்ந்து அமெரிக்கா சென்று உலக புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தை முடித்தார்.

அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொருளாதாரத் துறையில் சர்வதேசப் பேராசிரியாகப் பணியாற்றி வருகிறார்.

முன்னதாக அவர் ஹார்வர், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியையாகப் பணிபுரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2013-ஆம் ஆண்டு மில்லினியம் டெவலப்மென்ட் கோல்ஸ் எனப்படும் மேம்பாடு இலக்குகளை வடிவமைக்க ஐநாவால் முன்மொழியப்பட்டவர் இந்தப் பொருளாதாரப் புலி அபிஜித் பானர்ஜி.

Image result for abhijit banerjee

17 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட ‘ஏழை பொருளாதாரம்’ உள்ளிட்ட மிக முக்கிய பொருளாதார புத்தகங்களை இவர் எழுதியுள்ளார்.

வறுமை ஒழிப்பு குறித்த இவரது பார்வை உலக அளவில் பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது. கடந்த 20 ஆண்டுகளாக வளர்ச்சி பொருளாதாரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய ஆராய்ச்சிகளுக்கு புதிய கோணத்தை ஏற்படுத்தியது.

உலகம் முழுவதும் 70 கோடி மக்கள் மிகவும் மோசமான வருமானத்தை கொண்டு இருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 5 வயதுக்குட்பட்ட 50 லட்சம் குழந்தைகள் குறைந்தபட்ச மருத்துவ உதவி கூட கிடைக்காமல் மரணமடைகின்றனர்.

Image result for abhijit banerjee and modi

இதுபற்றிய அவரது ஆய்வுகள் புதிய வளர்ச்சி பொருளாதாரத்தில் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன.

‘‘மொராகோ நாட்டில் ஒருவேளைக்கு கூட போதுமான உணவு கிடைக்காத நபர் தொலைக்காட்சி வாங்க முடியுமா? ஏழையாக இருக்கும் குழந்தைகள் பள்ளிக்கு சென்றாலும் கூட ஏன் கற்க முடியாமல் போகின்றனர். குழந்தைகள் திட்டமிட்டே ஏழைகளாக்கப் படுகின்றனரா?

இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் கிடைத்தால் மட்டுமே உலகளாவிய வறுமையை நாம் விரட்ட முடியும்’’ என அபிஜித் பானர்ஜி கூறியுள்ளார்.

Image result for abhijit banerjee and modi

இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை தற்போது நிலையற்றதாக உள்ளது. தற்போதுள்ள புள்ளி விவரங்களை வைத்து பார்க்கும்போது பொருளாதாரம் உயரும் என கூற முடியாது என்றும் கூறியுள்ளார்.

கடந்த 5 அல்லது 6 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தில் ஓரளவு வளர்ச்சி இருந்ததாகவும் தற்போது அதுவும் இல்லை. இந்திய பொருளாதாரம் தடுமாற்றத்திலுள்ளதாகவும், அரசாங்கம் மிகுந்த கவனத்துடன் கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்திய அரசு பணமதிப்பு இழப்பை கொண்டுவந்தபோது, “அரசின் இந்த நடவடிக்கை மனக்குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதன் பின்னணியில் உள்ள தர்க்கம் எனக்கு புரியவில்லை. ஏன் ரூ.2,000 நோட்டுகளை அறிமுகப்படுத்த வேண்டும்? தற்போது எதிர்பார்க்கப்படுவதை விட வலி மிக அதிகமாக இருக்கும் என்று நான் சந்தேகிக்கிறேன்” என்று அதனை எதிர்த்தவர் தான் இந்த அபிஜித் பானர்ஜி.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker