அரசியல்தமிழ்நாடு

மறுவாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க தடை – உச்சநீதிமன்றம் அதிரடி…

ராதாபுரம் தொகுதியின் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க உச்சநீதிமன்றம் நேற்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

தமிழக சட்டசபைக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட இன்பதுரை, தி.மு.க. வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிப் பெற்றார்.

Image result for appavu mla

இன்பதுரை வெற்றி பெற்றதை எதிர்த்து திமு.க. வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “ராதாபுரம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளில் 203 வாக்குகளை எண்ணவில்லை என்றும், அதேபோல 19, 20 மற்றும் 21-வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ராதாபுரம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளையும், 19, 20 மற்றும் 21-வது சுற்றுகளின் வாக்குகளையும் மீண்டும் எண்ண வேண்டும்” என்று உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அ.தி.மு.க எம்.எல்.ஏ. இன்பதுரை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.


Image result for inbadurai mla


இந்த மனு நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அருண் மிஸ்ரா, எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது இன்பதுரை தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி, “மறு வாக்கு எண்ணிக்கை நடத்த தேவை இல்லை என்பதால் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்து, மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

Image result for supreme court india



அதற்கு நீதிபதிகள், “மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்றும் அதேசமயம், மறுவாக்கு எண்ணிக்கை முடிவை தற்போது அறிவிக்க இடைக்கால தடை விதித்தும்” உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த திடீர் உத்தரவால், ராதாபுரம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் அதன் முடிவுகளை வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Image result for vote india

ஒருவேளை, மறுவாக்கு எண்ணிக்கையில் திமுக வெற்றி பெற்றால், அது தேர்தல் ஆணையத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் சிறிதளவு நம்பிக்கையையும் இழக்க வைத்துவிடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker