அரசியல்இந்தியா

காஷ்மீருக்காக போராடிய பரூக் அப்துல்லாவின் சகோதரி கைது…

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கியதை எதிர்த்து போராடிய பரூக் அப்துல்லாவின் சகோதரி மற்றும் மகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவு ரத்து செய்தது மோடி அரசு. அதுமட்டுமின்றி, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

Image result for kashmir 370

முன்னெச்சரிக்கையாக காஷ்மீரில் அசம்பாவிதங்களை தடுக்க ராணுவம் குவிக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

காஷ்மீரில் இயல்பு நிலை சீரடைந்த பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.  அரசின் முடிவுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடக்கூடும் என்பதால், முன்னாள் முதல் மந்திரிகள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். 

Image result for kashmir 370

எம்.பி.யும் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இதனிடையே, காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு பிரிவு 370-ஐ நீக்கியதற்கு எதிராக முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லாவின் சகோதரி சுரைய்யா மற்றும் மகள் சபியா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Image

காவலில் வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்கும்படி அவர்கள் வலியுறுத்தினர்.  அவர்களை போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் காஷ்மீரில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker